இதுநாள் வரை சின்னச்சின்ன படங்களில் மட்டும் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வந்த இயக்குனர் சமுத்திரக்கனி, இப்போது ப்[பா.ரஞ்சித் ரஜினியை வைத்து இயக்கவுள்ள ‘காலா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்காக இரண்டு மாதங்கள் கால்ஷீட் கொடுத்திருகிறாராம் சமுத்திரக்கனி.
மேலும் நானா படேகர் உட்பட வேறு சில பாலிவுட் நடிகர்களும் இந்தப்படத்தில் நடிக்கிறார்களாம். பாலிவுட் நடிகை ஹிமா குரோஷி கதாநாயகியாக நடிக்கிறார். கபாலியை தொடர்ந்து இந்த படத்திலும் சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 28-ஆம் தேதி மும்பையில் துவங்கவிருக்கிறது..