காலா படத்தின் முதல்பார்வையில் அம்பேத்கர் பற்றிய குறிப்பு இருப்பது தெரியுமா?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் காலா படத்தின் முதல்பார்வை இன்று வெளியிடப்பட்டது. இதிலும் தமது முந்தைய படங்களைப் போலவே அரசியல் குறியீடுகளை வைத்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

அவர்கள் வெளியிட்ட இரண்டு படங்களில் ஒன்றில் உள்ள ஜீப்பின் எண் MH-01 BR 1956

இதில் எம்ஹெச் என்பது மகாராஷ்டிராவையும், பிஆர் என்பது பீமாராவ் அம்பேத்கரையும் 1956 என்பது அவர் மறைந்த வருடத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

காவி வேட்டி கறுப்புச் சட்டை, சிவப்புக்கொடி என்று பல்வேறு குறியீடுகளும் இருக்கின்றன.

இவற்றின் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது படம் வந்தால்தான் தெரியும் ஆனால் இதிலும் காரசாரமான அரசியல் இருக்கப்போகிறது என்பது இப்போதே தெரிந்துவிட்டது.

Leave a Response