மூன்றாவது இடத்தில் சிவகார்த்திகேயன் தானாம்..!


ஒரு காலத்தில் படங்களின் வசூல் நிலவரத்தை வைத்தும் யார் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை வைத்தும் நம்பர் ஒன, நம்பர் இரண்டு என கணக்கிட்டார்கள். இப்போது டெக்னாலஜி வளர்ந்துவிட்ட இந்த யுகத்தில் ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது..

இது என்ன விதமான கணக்கு தெரியுமா..? டிவிட்டரில் அதிக ஃபாலோவர்களை ஆரம்பத்திலிருந்தே பெற்று வந்த சிவகார்த்திகேயன் தற்போது 3 மில்லியன் ஃபாலோவர்களைக் கடந்துள்ளார். நடிகர்களில் இதற்கு முன் தனுஷ், ரஜினிகாந்த் ஆகியோர் மட்டுமே 3 மில்லியன் ஃபாலோவர்களைக் கடந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து இப்போது சிவகார்த்திகேயன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்

தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். அவருக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்க முக்கியக் காரணம் யு டியூப் போன்ற வீடியோ, வலைதளங்கள்தான். அவருடைய டிவி நிகழ்ச்சிகள் அதில் மிக அதிகமாக பார்வையிடப்பட்டு அவரை ஒவ்வொரு மக்களிடமும் கொண்டு போய்ச் சேர்த்தது. அதை அப்படியே அழகாக அவர் பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்லவேண்டும்.

Leave a Response