போராட்டத்தை கைவிடுங்கள் ; விஷாலை எச்சரித்த ஆர்.கே.செல்வமணி


வரும் மே-30ஆம் தேதி முதல் திரையுலகில் திருட்டு விசிடி உள்ளிட்ட பல பிரச்சனைகளை தீர்க்க கோரி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்திருந்தார். இதனால் பல படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை மாற்றி வைத்த நிகழ்வுகளும் நடந்தன.

ஆனால் விஷாலின் இந்த முடிவுக்கு தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் உடன்படாமல் இருந்தனர். இந்தநிலையில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் விஷால். விஷாலின் இந்த அறிவிப்புக்கு பின்னால் பெப்சி தலைவராக உள்ள ஆர்.கே.செல்வமணியின் ஆலோசனையும் எச்சரிக்கையும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இது விஷாலின் பேச்சிலும் வெளிப்படவே செய்தது.. நாம் பயந்தது போல ஜி.எஸ்.டி வரி தற்போது 28% அறிவிக்கவுள்ளார்கள். தணிக்கை முடிந்து வரிச்சலுகை சான்றிதழ் வாங்கி ஜுனில் வெளியாக நிறைய படங்கள் தயாராக உள்ளது. ஜுலையில் வெளியிட்டால் ஜி.எஸ்.டி வரி சேர்ந்து வெளியிடும் சூழல் ஏற்படும் என்றார்கள். தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்வமணியும் இது தொடர்பாக பேசினார்கள். அவருடைய ஆலோசனையை ஏற்று தற்போது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுகிறோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response