நிஜ நிகழ்வுகளின் கோர்வையாக உருவாகும் ‘சிவா மனசுல புஷ்பா’..!


அரசியலில் அவ்வப்போது ஏதாவது அதிரடி நிகழ்வுகள் நிகழ்வது வழக்கம் தான்.. ஒரு சில படைப்பாளிகள் உடனே அவற்றை சினிமாவாக மாற்றி இன்னும் பரபரப்பு கூட்டுவதும் வாடிக்கை தான். அப்படி ஒரு படத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான வாராகி என்கிற பத்திரிகையாளர் படமாக இயக்குகிறார்.

படத்துக்கு பெயர் ‘சிவா மனசுல புஷ்பா’.. பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல.. இது திமுக எம்பி சிவா மற்றும் அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா பற்றிய படமா என்றெல்லாம் நீங்களும் நினைக்கவேண்டாம்.. இயக்குனரும் அப்படி சொல்லவில்லை. ஆனால் இது முழுக்க முழுக்க அரசியல் படம் என்று மட்டும் உறுதியாக சொல்கிறார் வாராகி.

“இந்தக் கதை நான் வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களின், சர்ச்சைகளின் தொகுப்பு. நிஜத்தில் நடந்தவை. ஒருவருக்கொருவர் இரு எதிர் துருவங்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் இந்தக் கதையில் இடம்பெறுகிறது. படம் வெளியாகும்போது பல அதிர்வலைகளை தமிழக அரசியல் சந்திக்கும்,” என பொடி வைத்து பேசுகிறார் வாராகி.

Leave a Response