‘வடசென்னை’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு..!


வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க தேவையான அம்சங்களுடன் களமிறங்கிய ‘வடசென்னை’ படம், முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றதுடன் தற்காலிகமாக நின்றிருந்தது. அதன்பின்னர் தனுஷ் ப.பாண்டி டைரக்சனில் ஒருபுறம், வி.ஐ.பி-2வில் நடிப்பு மறுபுறம் என பிசியாக இருந்ததால் வடசென்னையின் அடுத்தகட்ட படப்பிடிப்பை உடனடியாக துவங்க முடியவில்லை.

இந்தநிலையில் ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் மீண்டும் துவங்கியது. தற்போது இந்த இரண்டாம் கட்ட பப்பிடிப்பு முடிவடைந்துள்ளது… இந்த தகவலை இந்த ஷெட்யூலில் தனுஷுடன் இணைந்து நடித்துல் நாயகிகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிபடுத்தியுள்ளார்.

இதை தொடர்ந்து இன்னும் ஓரிரு தினங்களில் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக பிரேசில் கிளம்புகிறார் தனுஷ்.

Leave a Response