
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர்
ஆதவ் அர்ஜுனா வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பை சுட்டிக்காட்டி,ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலில் மூளையாகச் செயல்பட்ட ஜான்பிரிட்டோ,தவெக அரசின் பொதுப்பணித்துறை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலாமாகியுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,கட்சியின் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி ஆதவ் அர்ஜுனா தரப்பில் திமுக தலைவர்
மு.க.ஸ்டாலினுக்கும்,திமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவுக்கும் வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனா சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.பி.சூரியபிரகாசம்,ஆர்.மோகன் பார்த்தசாரதி ஆகியோர் அதை
அனுப்பியுள்ளனர்.
அதில்…
அமலாக்கத் துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள ஜான்பிரிட்டோ எனது உறவினர் அல்ல.இது சம்பந்தமாக எனது உறவினர் ஜான்பிரிட்டோ ஊடகங்களில் விளக்கம் அளித்துள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்.
ரூ.1 கோடிமான நஷ்டஈடு வழங்கவேண்டும்.தவறினால் குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இது அரசியலரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
