
2026-27 ஆம் கல்வியாண்டுக்கான அதிகாரப்பூர்வ நாட்காட்டியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்விவரம்…
இந்தக் கல்வியாண்டுக்கு மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள்.22 நாட்கள் அரசு விடுமுறையுடன் சேர்த்து விடுமுறை நாட்கள் மொத்தம் 155.
காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதிவரை நடைபெறும்.செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதிவரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை.
அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதிவரை நடத்தப்படும்.டிசம்பர் 24 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 4 ஆம் தேதிவரை 11 நாட்கள் அரையாண்டு விடுமுறை.
செப்டம்பர் 4 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தியும் செப்டம்பர் 14ம் தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தியும் கொண்டாடப்படுவதால்,சனி மற்றும் ஞாயிறு வாரவிடுமுறையுடன் சேர்த்து இரண்டுமுறை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
அக்டோபர் மாதத்தில் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் (திங்கள், செவ்வாய்) ஆயுதபூஜை,விஜய தசமி வருவதால், வாரவிடுமுறையுடன் சேர்ந்து,தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பண்டிகை 15 முதல் 17 வரை வெள்ளி,சனி,ஞாயிறு என மூன்று நாட்கள் கொண்டாடப்படுவதால், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது.
இந்தக்கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாள் 2027 ஏப்ரல் 23 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.2027 ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கும்.இந்தக்கல்வியாண்டில் ஜூலை 19, செப்டம்பர் 19, டிசம்பர் 19 ஆகிய 3 சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் இதரவகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
