பதவிக்காக எதிரியின் காலைப் பிடிக்கும் கேவலம் – விஜய் மீது குற்றச்சாட்டு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக இருக்கும் விஜய் கட்சியை தமிழ்நாடு ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை.அதோடு பெரும்பான்மைக்குத் தேவையான 118 பேர் ஆதரவைக் காட்டினால்தான் பதவிப்பிரமாணம் என்று சொல்லிவிட்டார்.

இதனால், திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச்சிறுத்தைகள், பொதுவுடைமைக் கட்சிகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டுக் கொண்டிருக்கிறது விஜய் கட்சி.இவற்றில் ஆதரவு தரமாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்த முஸ்லிம்லீக் கட்சியிடமும் ஆதரவு கேட்டு அவர்கள் இடத்துக்குப் போனது விஜய் கட்சி.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பாக்கியராசன் வெளியிட்டுள்ள பதிவு…

அதிக தொகுதிகள் வென்றிருக்கும் தவெகவை ஆளுநர் பதவி ஏற்க அழைக்கவேண்டும் என்பதில் உடன்படுகிறேன். ஆனால் தான் ஆட்சி அமைக்க எந்த திமுக கூட்டணியை எதிர்த்து ஓட்டு வாங்கினாரோ அந்த திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவது விஜயின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம். காங்கிரஸ் ஆதரவை பெற்றபொழுதே அவரின் முகமூடி கிழிந்துவிட்டது. அதேபோல் திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று விட்டு அமைச்சர் பதவிக்காக விஜயை ஆதரிக்கும் சந்தர்ப்பவாத கட்சிகளை இனி மக்கள் துடைத்தெறிய வேண்டும்.
பதவிக்காக எதிரியின் காலை பிடிப்பதை விட கேவலம் எதுவுமில்லை..

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response