சசிகலா கட்சியின் 38 பேர் கொண்ட இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியல்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி,அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதியகட்சியை சசிகலா தொடங்கியுள்ளார். இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி வந்த அவர், பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசுவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.மற்றும் சில சின்னகட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இதற்கிடையில் மார்ச் 18 முதல் 23 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்பமனுக்கள் பெறப்படும் என அறிவித்திருந்தார். விருப்பமனு மற்றும் நேர்காணல்களைத் தொடர்ந்து 21 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை சசிகலா வெளியிட்டார்.

நேற்றிரவு 38 பேர் கொண்ட இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் அறிவித்துள்ளார்.

அதன் விவரம்…

1.ஸ்ரீபெரும்புதூர் (தனி) -திருமதி மு.சந்திரா முன்னாள் சமஉ,
2.நிலக்கோட்டை (தனி) – முனைவர் ஜி.அன்பழகன் முன்னாள் சமஉ
3.இலால்குடி – திருமதி ஆர்.ஜோஸ்பின்
4.குன்னம் – க.மணிகண்டன்
5.காட்பாடி -வ.சந்திரன்
6.குடியாத்தம் (தனி) -திருமதி க.தபிதாஸ்
7.அரக்கோணம் (தனி) -தி. முரளிதரன்
8.விருத்தாசலம் – கி.சுந்தர்ராஜன்
9.அரியலூர் – சா.ராஜ்குமார்
10.மதுரவாயல் – ஜெ.வெங்கடேசன்
11.இராமநாதபுரம் – திருமதி ப.கற்பகவள்ளி பழனிச்சாமி
12.சூலூர் -திருமதி.பி.பாப்பா முத்துலட்சுமி
13.காரைக்குடி – அ.காளிமுத்து
14.சங்கராபுரம் – க.நடராஜன்
15.திருப்பத்தூர் -திருமதி எஸ்.உமாதேவி
16.திருச்சுழி – தி.முருகேசபாண்டியன்
17.காஞ்சிபுரம் – ப.வெக்கடேசன்
18.ரிஷிவந்தியம் – நா.ரங்கநாதன்
19.ஆவடி – பக்தவச்சலம்
20.கவுண்டம்பாளையம் – திருமதி ம.மல்லிகா
21.விளாத்திகுளம் – திருமதி சிவ சுஜா விஜயலட்சுமி
22.வாசுதேவநல்லூர் (தனி) – திருமதி அ.பொன்னுத்தாய்
23.சிங்காநல்லூர் – என்.ஆர்.அப்பாதுரை
24.மாதவரம் – பா.நெடுஞ்செழியன்
25.தூத்துக்குடி – க.ஏசாதுரை
26.வாணியம்பாடி – தெ.கணேசன்
27.கடலூர் – கே.எஸ்.இராமசாமி
28.உளுந்தூர்பேட்டை – ஜெ.குமார்
29.விராலிமலை – பி.கார்த்திகா
30.சிதம்பரம் – மா.தனசேகரன்
31.செங்கல்பட்டு – எஸ்.ஏ.சுபாஷ்
32.மேட்டுப்பாளையம் – டி.தாமோதரன்
33.பவானிசாகர் (தனி) – எம்.ஜி.ராக்கி
34.ஆலந்தூர் – என்.ஆர்.அரிராஜன்
35.எழும்பூர் (தனி) – த.மகிழன்பன்
36.சேந்தமங்கலம் – சி.ஜெகநாதன்
37.சோழவந்தான் (தனி) -மருத்துவர் க.பாலமுருகன்
38.செய்யூர் (தனி) – ஆ.முருகவேல்

இவற்றோடு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சிவகங்கை வேட்பாளர் வி.பிரபு மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக குரு.முருகானந்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

அதேபோல மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளரை மருத்துவர் இராமதாசு கட்சி அங்கு போட்டியிடுவதால் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் சசிகலா.

Leave a Response