சிபிஐயின் எஃப் ஐ ஆரிலும் விஜய் கட்சியினர் மீதே குற்றச்சாட்டு

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடை​பெற்ற நடிகர் விஜய்யின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை உச்சநீதி​மன்ற உத்​தர​வின்​படி ஒன்றிய குற்றப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசா​ரித்து வரு​கிறது.

முன்​ன​தாக, அக்டோபர் 17 ஆம் தேதி கரூர் சென்ற சிபிஐ குழு​விடம், கரூர் நகர காவல்துறையினர் மற்​றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மையி​லான சிறப்புப் புல​னாய்​வுக் குழு​வினர்,அவ்வழக்கு தொடர்பான அனைத்து
ஆவணங்​களையும் ஒப்​படைத்​தனர்.

இதையடுத்​து, சிபிஐ குழு​வைச் சேர்ந்த ஆய்​வாளர் மனோகரன், கரூர் குற்​ற​வியல் நீதி​மன்​றம் 2 இல் நீதிபதி
சார்​லஸ் ஆல்​பர்ட் முன்​னிலை​யில் முதல் தகவல் அறிக்​கையை அக்டோபர் 22 ஆம் தேதி தாக்​கல் செய்​தார்.

அதில்,விஜய் கட்சியின் கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த், இணைச் செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் மற்​றும் தவெக​வினர் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது எனக் குறிப்​பிட்​டு, விசா​ரணை​யைத் தொடர உள்​ள​தாகத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், கரூர் குற்​ற​வியல் நீதி​மன்​றம் 1 இல் சிபிஐ தாக்​கல் செய்​துள்ள முதல் தகவல் அறிக்கையின் நகலைக் கேட்டு தவெக வழக்​கறிஞர்​கள் நேற்று மனு தாக்​கல் செய்​தனர். இதையடுத்​து, சிபிஐ தாக்​கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் அவர்​களிடம் வழங்​கப்​பட்​டது.

தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால் விசாரணை சரியாக நடக்காது ஒன்றிய புலனாய்வுத் துறை விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும் என்று சொல்லிக் கொண்டிருந்தர்கள்.இப்போது, ஒன்றிய புலனாய்வுத் துறையின் முதல் தகவல் அறிக்கையும் விஜய் கட்சியினர் மீதே குற்றம் சுமத்தியிருக்கிறது, இதனால் அப்படிச் சொன்னவர்கள் திடுக்கிட்டுப் போயிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த முதல் தகவல் அறிக்கையை வைத்துக்கொண்டு அரசியல் ரிதியாக ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களால் விஜய் மிரட்டப்படுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response