
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று காலமானார். அவருக்கு வயது 94. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.
கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டரில் இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
”என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று ரஜினி தெரிவித்திருக்கிறார்.


