
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஈரோடு அருகே உள்ள சித்தோட்டைச் சேர்ந்த இளைஞர் தர்மலிங்கம் தீக்குளித்து உயிரிழந்தார்.
சந்தைகளுக்குச் சென்று பொம்மை வியாபாரம் செய்து வந்த அந்த இளைஞர் தமிழுணர்வு மிக்கவராம்.
காவிரிக்காக தமிழகம் முழுதும் இவ்வளவு போராட்டங்கள் நடந்தும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லையே என்கிற ஆத்திரத்தில் தன்னையே மாய்த்துக் கொண்டார்.

தீக்குளிக்குமுன், இந்திய அரசே கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர், எடப்பாடி திரு பழனிசாமி நீங்க தமிழன் இல்லையா தமிழ்நாட்டு மக்களிடம் துணிந்து சொல்லுங்க பார்க்கலாம், தமிழகம் வருகிற நரேந்திரமோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது – பா.தர்மலிங்கம்
இவ்வாறு எழுதி வைத்துவிட்டு தீக்குளித்திருக்கிறார் தர்மலிங்கம்.


