காவிரி மேலாண்மை வாரியம் கோரி விருதுநகரில் ஒருவர் தீக்குளிப்பு

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்று, தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

நேற்று ஈரோடு மாவட்டம் சித்தோட்டைச் சேர்ந்த தர்மலிங்கம், மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து மறைந்தார்.

இந்நிலையில், இன்று விருதுநகரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சரவணன் சுரேஷ்(வயது 50) என்ற நபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தீக்குளித்ததில் 80 சதவீத காயம் அடைந்த சரவணன் சுரேஷ், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Response