தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கிறதாம் நடிகை வித்யாபாலனுக்கு..!


பாலிவுட் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை வித்யாபாலன். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வித்தியாசமான பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பலமுறை இவரை நடிக்க அழைத்தும் இவர் திட்டமாக மறுத்துவிட்டார். இதே பதில் தான் அவரது சொந்த ஊரான கேரளாவுக்கும்.. காரணம் இவர் நடிக்க வந்த புதிதில் இந்த இரண்டு மொழி இயக்குனர்களும் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதுதான்.

“ஆரம்பத்தில் எனக்குத் தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், எனக்கு மகிழ்ச்சிதான். தமிழில் வாய்ப்பு கிடைக்காததனால்தான், என் வாழ்க்கை தற்போது நன்றாக இருக்கிறது. என் கனவு நனவாகி இருக்கிறது. நல்ல கதை அமைந்தால், கதையைக் கேட்கும்போது எனக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் தமிழில் நடிப்பேன்’’ என்கிறார் வித்யாபாலன்.

Leave a Response