
பொதுவாகவே ரசிகர்களுடன் அன்பாக நெருங்கி பழகும் தன்மை கொண்டவர் தான் பாலிவுட் நடிகை வித்யாபாலன். சமீபத்தில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்துபோது அப்போது ரசிகர்களை பார்த்து கையசைத்த வித்யாபாலனுடன் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
ரசிகரின் வேண்டுகோளை ஏற்று அவருடன் செல்பி எடுக்க முயன்றபோது, வித்யாபாலனின் அனுமதியின்றி அவரது தோள் மீது கைப்போட்டதும், ரசிகரை வித்யா எச்சரித்துள்ளார். மீண்டும் அவர் அதேபோன்று நடந்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த வித்யா ரசிகரை சரமாரியாக திட்டிவிட்டு, செல்பி எடுக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இது தொடர்பாக ஆன்லைன் போர்டல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வித்யாபாலன் இதனை கூறியுள்ளார். அப்போது அவர் கூறுகையில்,’தான் பொது வாழ்வில் இருக்கும் நடிகை என்பதை ஒப்புக் கொண்டாலும், தான் பொது சொத்து அல்ல’ என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.


