‘குரங்கு பொம்மை’யில் பிரமிக்க வைத்த பாரதிராஜா..!


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாரதிராஜா நடிகராகவும் மாறினார். குறிப்பாக விஷால் நடிப்பில் வந்த பாண்டிய நாடு படத்தில் சிறப்பாக நடித்து சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதும் பெற்றார். அதன்பின் பல படங்களில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை.

இந்நிலையில், கிட்டத்தட்ட 3 வருடத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் குரங்கு பொம்மை படத்தின் மூலம் களத்தில் இறங்கியுள்ளார். சொல்லப்போனால் படத்தின் நாயகனான விதார்த்-ஐ தன் நடிப்பு திறமையால் மறக்க வைத்து விட்டார். அந்தளவுக்கு அனைத்து காட்சிகளிலும் தத்ரூபமாக நடித்து நடிப்புக்கு நங்கூரம் சூட்டியுள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகர், துணை நடிகருக்கான பல விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் ஒரு நடிகராக பாரதிராஜா பிஸியாகி விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response