
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் பிந்துமாதவி வந்ததும் ஓவியா வெளியேற்றப்படுவார் அல்லது அவரே வெளியேறிவிடுவார் என்பது போன்ற யூகங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.
ஓவியா இல்லையென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியே எங்களுக்குக் கிடையாது என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஓவியாவுக்காக ரசிகர்கள் ஒருபக்கம் குரல் கொடுக்க, சில பிரபலங்களும் தங்களது படத்தில் அவரை ஒப்பந்தம் செய்யத் தயாராக இருக்கின்றனர். ஓவியாவுக்குக் கிடைத்திருக்கும் இவ்வளவு பெரிய வரவேற்பு பலரையும் வயிறெரிய வைத்திருக்கிறது.
இதனால், வீட்டில் உள்ளவர்கள் அவரை எலிமினேட் செய்ய விருப்பம் தெரிவித்து வந்தாலும் நிகழ்ச்சியினர் அதைச் செய்யவில்லை,இப்போது, ஓவியாவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறி வருவதாகப் புதிய செய்தி நடமாடுகிறது.
இதனால் இந்த வாரம் ஓவியா எலிமினேட் செய்யப்படாமல் ஸ்ரீ வெளியேறியது போல் இவரும் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
இன்றும் நாளையும் நிகழ்ச்சி போகிற போக்கைப் பார்த்தால் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்கின்றனர் ஓவியா ரசிகர்கள்.


