ஓவியாவின் ஆட்டம் ஆரம்பம்

பிக்பாஸ்

ஒருவழியாக ஜுலிக்கு ஒரு பாயாசத்தைப் போடும் நேரம் வந்துவிட்டது. வழக்கம்போல் தலைவிக்கு போட்டுப் போட்டு, வையாபுரி அண்ணனுக்கும் ஆறுதல் ஓட்டுகளை வழங்கி, ஜூலியை அனுப்பி வைப்போம். எல்லோரும் வச்சு செய்யும்போதும் ‘ஹி..ஹி’ என்று இளித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும்போது, கோபமும் பரிதாபமும் சேர்ந்து வருகிறது. நாமினேசனுக்கு வந்துவிட்டாலே, ஜூலி பம்மிவிடுவார். ரொம்ப நல்லபிள்ளை ஆகிவிடுவார். ஆனாலும்…. போதும்மா உன் சகவாசம்!

எச்சையைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் புத்தி மாறிவிடுமா? ‘உன் பேர் டேமேஜ் ஆகுது. அடக்கி வாசி’ என்று ஏதோவொரு வழியில் பிக்பாஸ் காயூவிற்கு வார்னிங் கொடுத்திருப்பார் போல..நேரடியாக எச்சைத்தனத்தைக் காட்டுவதில்லை. ஆனாலும் நாய் வாலை நிமிர்த்த முடியுமா? அவ்வப்போது எச்சைத்தனம் எட்டிப்பார்க்கிறது. அநேகமாக காயூ வெளியே போனால் நிம்மதி எனும் முடிவுக்கு பிக்பாஸே இந்நேரம் வந்திருக்கணும். ஆனால் உள்ளே இருக்கிறவங்களுக்கு அந்த தைரியம் இல்லையே!

ரைசாவின் பெர்சனல் விஷயத்தை ஓவியா சொன்னது தப்பு. இதுவரை யார் என்ன சொன்னாலும் ‘யா…ட்ரூ..ட்ரூ’ என்று மிக்சர் சாப்பிட்ட பேபியே வாய் திறந்து ‘நோ..நோ’ என்று கதறிவிட்டடது. அதற்கு ஓவியா இன்று சாரி சொல்வார் என்று எதிர்பார்த்தேன்; ஏமாற்றிவிட்டார். நிலவின் மேல் ஒரு களங்கம்….என்ன இது, சிநேகன் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டேன்!!

பிந்து தன் ஆட்டத்தை எச்சரிக்கையாக ஆரம்பித்திருக்கிறார். காயூவிற்கு எட்டாம் இடம் கொடுத்து, பெஸ்ட் டீ என்று அவார்டு கொடுக்கிறார். ஜூலிக்கு கடைசி இடம் கொடுத்து, பெஸ்ட் டான்ஸ்(!) என்று அவார்டு கொடுக்கிறார். இந்த பொண்ணு டீலிங்கே புதுவிதமா இருக்கே!

ஓவியா ஆர்மியின் பலத்தை புரிந்துகொண்டு உள்ளே நுழைந்தவர் என்பதால், தலைவியை இப்போதைக்கு சீண்டமாட்டார். சப்போர்ட்டாகவும் நிற்கமாட்டார் என்று நினைக்கிறேன். ஆனாலும் ஓவியாவின் இயல்புக்கு அருகேகூட இவர் வரமுடியாது. இயல்பாக இல்லாமல், ரொம்ப கேர்ஃபுல்லாக இருப்பது நடிப்பு மாதிரித் தெரிகிறது. முன்பு ஓவியாவிற்கு அடுத்து ஜூலியை வைத்திருந்தோம். ஜுலி வெளியே போக, பிந்து அந்த இடத்திற்கு வரலாம்.

‘நான் ஆரவ்வை நாமினேட் பண்றேன்..ஏன்னா, நான் ஒரு செல்ஃபிஷ்’ என்று அதிரடி ஸ்டேட்மெண்டுடன் தலைவியின் ஆட்டம் ஆரம்பமாகியது. ‘இதுக்கு என்னடா அர்த்தம்’னு ட்விட்டர் நாயகன் கமலுக்கே தலை சுத்தியிருக்கும். ’அவன் இவளை நாமினேட் பண்றான்..இவ அவனை நாமினேட் பண்றா..ச்சே, வீடாடா இது!’ என்று பிக்பாஸும் காண்டாகியிருக்கலாம்.

நான் கொச்சியில் வேலை பார்த்தபோது, பெரும்பாலும் தமிழ்பாடல்களையே மலையாளிகள் கேட்பதைப் பார்த்திருக்கிறேன். நமது ‘பீட்’ அவர்களுக்குப் பிடிக்கும். ஓவியாவிற்கும் பல தமிழ்ப்பாடல்களை தெரிந்திருக்கிறது. இதுவரை தத்துவ ஞானி, டான்ஸர், குழந்தை என்று பல அவதாரங்களில் நம்மை பரவசப்படுத்திய தலைவி, இன்று பாடகியாக புது அவதாரம் எடுத்தார். இன்னும் இந்த புள்ளை எத்தனை திறமைகளை ஒளித்து வைத்திருக்கிறதோ, பார்ப்போம்!

-செங்கோவிகுரு

Leave a Response