
தமிழில் செலக்டிவாக சில படங்களை தயாரித்து ஒரு நல்ல தயாரிப்பாளராகவும் வளம் வருகிறார் தனுஷ்.. தற்போது தமிழையும் தாண்டி மலையாள திரையுலகிலும் கால் பதித்துள்ளார் தனுஷ். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தை மலையாளத்தில் தயாரித்து வருகிறது..
இதன் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதமே துவங்கி நடைபெற்று வருகிறது… இந்தப்படத்தை டோமினிக் அருண் என்பவர் இயக்குகிறார். சமீபகாலமாக மலையாள திரையுலகில் வளர்ந்துவரும் நாயகனான டொவினோ தாமஸ் தான் இந்தப்படத்தின் ஹீரோவாக நடிக்கிறார்..
இவர் தவிர இன்னொரு நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மலையாள இளம் நடிகரான உன்னி முகுந்தன்.. இவர் ஏற்கனவே கடந்த ஏழு வருடங்களுக்கு முன் தனுஷ் நடித்த சீடன் படத்தில், கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


