கௌதமி உங்கள் மேல் வைத்த குற்றச்சாட்டு அசிங்கமானது, தெரியுமா கமல்?


கமல் தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டிக்கு பல்வேறு எதிர்வினைகள் அவற்றில் ஒன்றாக முகநூலில் இளங்கோ கல்லானை யின் எதிர்வினை…..

கமலஹாசன் ஒரு பொறுப்பான வயதுக்கு வந்தவரைப் போல செயல்பட வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னார். கமலஹாசனின் பிரச்சனை என்ன? சாதி மத அடையாளங்களைக் கொண்டு படங்களை எடுக்கிறார். பிறரை விமர்சனம் செய்கிறார். அது கருத்துச் சுதந்திரம் என்பது சரி. ஆனால் வெகுஜன ஊடகமான சினிமாவால் பல்வேறு பரப்புரைகள் சமூக வெறுப்புகளை அவர் வளர்த்தெடுத்தவர். ஹே ராம் காந்தியை பற்றிய சித்திரம் என்று புரிந்து கொண்டால் அன்று சாவர்க்கர் பற்றிய முனுமுனுப்பை படத்தில் வைத்திருப்பார். என்ன அர்த்தத்தில்? காந்தியின் கொலையில் உள்ள RSS பின்னணியில் கோல்ப் ஆடும் சீமான்கள் குறிப்பாக மராட்ட பிராமணர்களின் பங்கை படத்தில் சொல்லித் தான் வருகிறார். ஆனால் இன்று சாவர்க்கரை தேச விடுதலை வீரர் லிஸ்டில் வைக்கிறார். அவர் புதிதாக இந்துத்துவம் படிப்பவர் அல்ல. தேவர் மகன் என்று ஒரு சமூகத்தை அடிப்படை வன்முறைச் சமூகம் என்றும் வெளிப்படையாக காட்டுப்பய கூட்டம் என்று வசனம் வைக்கிறார். அந்த மக்கள் அவ்வளவு அரசியல் அறிவு பெற்றவர்கள் அல்ல என்பதால் கடந்து போய் விட்டார்கள். ஒரு விருமாண்டியில் குற்றச் சூழலை ஒரு சமூகத்தைச் சுற்றித் தான் கட்டமைக்கிறார். நல்லம நாயக்கர்கள் காக்க வந்த தெய்வங்கள் என்று வெளிப்படையாக வைக்கிறார். அடுத்து அவர் உன்னைப் போல ஒருவன் சர்வதேச தீவிரவாதத்தை சரியாக சமூக அடையாளங்களைக் குறி வைத்து அடிக்கிறார். இடையில் தப்பிக்க தீவிராவாதிகளுக்கு மதம் கிடையாது என்று பூசி மொழுகுவார் இந்தக் கோழை. விஸ்வரூபம் படம் அரபி எழுத்துக்களில் வந்த போது தாங்கள் பார்க்க விருப்பபடுவதாக சொன்ன போது தன்னுடைய சுதந்திரம் பறிபோனதாக கதறினார். உண்மையில் எவரும் இவரைத் தட்டிக் கேட்கவில்லை. அமெரிக்க தேசிய உணர்ச்ச்சிக்கு அவர்கள் பாத்திராத ரசியர்களை முட்டாள்களாக காட்டுவதைப் போன்ற வேலைகளைச் செய்து தான் வந்தார். கமலஹாசனைப் பற்றிய தனிநபர் விமர்சனத்தை யாரும் வைக்கவே இல்லை. தங்களுக்கு இஸ்லாமியர்களைத் தூற்றுவதை அல்லது பிற சாதிகளைத் திட்டுவதைக் கொண்டாடுவதை கொண்ட மனநிலையில் உள்ள சாதி மத வெறியர்களின் தலைவராகத் தான் கமலஹாசன் நிற்பார். அவருடைய நிலைப்பாடு ஊழலுக்கு எதிரானது என்று அவர் அடிக்கடி சொல்ல வருவது தான் வரிக் கட்டுகிறேன் என்பதே. தமுக்கு வைத்திருக்கிறேன் தப்பு வைத்திருக்கிறேன் திராவிடம் என்பதெல்லாம் தமாசு பாஸ். நீங்க சமீபத்தில் சிக்கியிருக்க கேசு இருக்கே அது பெரிய சிக்கல். கௌதமி உங்கள் மேல் வச்ச குற்றச்சாட்டு கொஞ்சம் அசிங்கமானது. அதனால நீங்கள் இப்போ யாரோட அரசியலைப் பேசுகிறீர்கள் என்பது தான் முக்கியம். நீங்கள் திராவிட அரசியலை ஏற்றுக் கொண்டவரில்லை. உங்கள் சினிமா நஷ்டம் நீங்கள் எடுக்கும் ரிஸ்க்குகளைப் பற்றியெல்லாம் சிலாகிப்பது வேறு விஷயம். இப்போது நீங்கள் ஜெயலலிதாவிடம் தோற்று வடிகால் இல்லாமல் திண்டாடியவர் என்பதே உங்கள் அரசியல் பலவீனம். மத்தபடி உங்களுக்குள்ள ஒரு மிருகம் முழிச்சுக்கிட்டே இருக்குன்ன்னு நாசர் பாய்க்குக் கூட தெரியும். கொண்டைய மறைங்கடா டேய்.

Leave a Response