ஜெய்பூரில் காங்கிரஸ் பேரணி! பாஜக அதிர்ச்சி

இந்திய அரசியலில் இந்து மற்றும் இந்துத்துவா ஆகியவை இடையே தான் பெரும் போட்டி நிலவுவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி தாம் இந்து ஆனால் இந்துத்துவவாதி இல்லை என்று தெரிவித்தார்.

இந்திய அரசியலில் இந்து மற்றும் இந்துத்துவா இடையே தான் பெரும் போட்டி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இந்து மற்றும் இந்துத்துவா ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் இருப்பதாக ராகுல் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தி இந்து, ஆனால் கோட்சே இந்துத்துவவாதியாக இருந்தார் என்று ராகுல் தெரிவித்துள்ளார். இந்துத்துவவாதிகள் வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தை குறிவைத்தே செய்யப்படுவதாக கூறியுள்ள ராகுல்,

ஆனால் அதிகாரத்தை பயன்படுத்தி ஏதாவது செய்தார்களா என்றால் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இந்துத்துவவாதிகளை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு இந்துக்களை அதிகாரத்தில் அமர்த்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் ஆர்எஸ்எஸ் என்கிற ஒரு அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது.பிரதமர் மோடியின் தவறான நிர்வாகத்தால் ஒட்டுமொத்த நாடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

முன்னதாக பேசிய காங்கிரஸ் துணை பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி;

ஒன்றிய அரசு ஒருசில தொழிலதிபர்களுக்காவே செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். விளம்பரங்களை வெளியிட கோடிக்கணக்கில் செலவிடும் ஒன்றிய அரசு அந்த தொகையை விவசாயிகளுக்கு கொடுத்து உதவலாம் என்று பிரியங்கா தெரிவித்தார்.

விலைவாசி உயர்வு கொரோனா நிவாரணம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது.ஆனால் டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த போராட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் பெருமளவிலான பொதுமக்களும் பங்கேற்றார்கள் இதைக்கண்டு ஆளும் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.

Leave a Response