கலைஞருக்குச் செய்யவேண்டிய மரியாதை இதுதான்


கலைஞர் 94, அகவை 94 சட்டமன்ற நாயகனாக அகவை 60 . ஆகிய பெருமைகளுக்குச் சொந்தக்காரான கலைஞர் அவர்களுக்குச் சொல்லவேண்டிய உண்மையான வாழ்த்து எதுவென்று சொல்கிறார் ஆழிசெந்தில்நாதன். அவர்,

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பல மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் இன்று கலைஞரை வாழ்த்தக் கூடுகிறார்கள். இதன் அரசியல் முக்கியத்துவம் எல்லோருக்கும் தெரியும், புரியும்.

சென்னையில் இன்று கூடும் அரசியல் தலைவர்கள் ஆர்எஸ்எஸ் அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்க முடிவுசெய்தால், தொடர்ந்து கரம் கோர்த்து நின்றால், அது மாபெரும் மாற்றமாகும்.

தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி போன்ற முக்கிய அனைத்தந்திய முன்னணிகளை உருவாக்கியவதில் முதலும் முக்கியமானதுமான பங்கு வகித்த கலைஞருக்கு அளிக்கும் உண்மையான வாழ்த்தும் அதுதான்.

ஒரே நாடு ஒரே கட்சி ஒரே சர்வாதிகாரி எனக் கிளம்பியிருக்கும் கூட்டத்துக்கு எதிராக பல மட்டங்களில் எதிர்ப்புகள் கிளம்பவேண்டும். அந்த அளவில் இப்படிப்பட்ட முக்கியமான நிகழ்வுக்கு காரணமாக இருக்கும் மு.க.ஸ்டாலினை இன்று இந்திய அரசியல் வட்டாரம் உற்றுக்கவனித்து
க்கொண்டிருக்கிறது.

இந்த Birthday Party ஒரு Federal Festival ஆக உருவானால் அதுவே கலைஞருக்கான நல் வாழ்த்து. ஸ்டாலினுக்கான முதல் பெரிய வெற்றி.

Leave a Response