இயக்குனர் ஹரி அதிரடி போலீஸ் படங்களை இயக்க காரணம் என்ன.? ; ரகசியம் உடைத்த சூர்யா..!


போலீஸ் படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட் என்றாலே அது இயக்குனர் ஹரிதான்.. அவரது மற்ற படங்களை விட அவர் இயக்கும் போலீஸ் படங்கள் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அவர் ஏன் தொடர்ந்து போலீஸ் படங்களாக இயக்குகிறார் என்கிற காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா.

தான் நடித்துள்ள சி3 படத்தின் புரமோசனுக்காக நேற்று துபாய் சென்ற அவர் இரவு 7 மணி காட்சியை ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிங்கம் படத்தின் முதல் இரு பாகங்களும் பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு வேறு படம் நடிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் சிங்கம்-3-க்கான நல்ல கதை களம் அமைந்ததால் நானும், ஹரியும் மீண்டும் சிங்கம்3-ல் இணைந்திருக்கிறோம். தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய மைல் கல்.

சி3 படமும் வெற்றி பெற்றிருப்பதாக பல்வேறு இடங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. இது போலீசை உயர்த்தி பிடிக்கும் படம் தான். இயக்குனர் ஹரிக்கு போலீசில் சேரும் ஆர்வம் இருந்தது. அது நிறைவேறாததால் தனது ஆசையை சினிமா மூலம் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒரு சில போலீஸ் தவறாக நடந்திருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த போலீசையும் தவறாக சித்தரிப்பது வருத்தமாக உள்ளது. போலீசாரும் உணர்வுடன் போராட்டத்தில் சீருடையை மாற்றி கலந்து கொண்டதையும் நாம் பார்த்தோம்” என கூறியுள்ளார் சூர்யா

Leave a Response