நயன்தாராவுக்கு முழு திருப்தி தந்த ‘அறம்’..!


கமர்சியல் நடிகையாக இருந்து வந்த நயன்தாராவின் ஆர்வம் சமீபகாலமாக சமூக ஆர்வம் கொண்ட கதைகள் பக்கம் திரும்பியுள்ளது. அந்த வகையில் அவர் கதையின் நாயகியாக நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே ஏதேனும் ஒரு சமூக பிரச்சினையை மையமாக வைத்து கதை பண்ணியிருக்கிறார்கள்.

அந்த வகையில், கலெக்டர் வேடத்தில் அவர் நடித்துள்ள அறம் படத்தில் தண்ணீர் இல்லாமல் அவதிப்படும் குக்கிராமத்தை கண்டுகொள்ளாமல் விட்ட அரசு அதிகாரிகளின் அலட்சியத்தை தட்டிக்கேட்கும் வேடத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

மேலும், இந்த அறம் படத்தின் படப்பிடிப்பு பரமக்குடி பகுதியில் உள்ள முதுகுளத்தூர் பகுதிகளில் உள்ள குக் கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ளது. கதைப்படி, கண்டு கொள்ளாமல் விடப்பட்ட மக்களின் கோரிக்கைகள் நேரடியாக சென்று பார்வையிட்டு அதை நிறைவேற்றும் நயன்தாரா, அரசு அதிகாரிகளுடன் பெரிய அளவில் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் உள்ளதாம்.

இதற்கு தியேட்டரில் பெரிய அளவில் கைதட்டல் கிடைக்கும் என்கிறார்கள். குறிப்பாக, அடித்தட்டு மக்களின் நியாயத்துக்காக போராடும் நயன்தாரா, இந்த படத்திற்காக 50 நாட்கள் முகாமிட்டு நடித்த பிறகு ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி கிடைத்துள்ளது என்று பெருமையுடன் சொல்லிவிட்டு விடைபெற்றாராம் நயன்தாரா. இந்தப்படத்தை கோபி நயினார் என்பவர் இயக்கியுள்ளார்.

Leave a Response