மீண்டும் சுறுசுறுப்புடன் ஆரம்பித்த ‘சதுரங்க வேட்டை-2’ படப்பிடிப்பு..!


மனோபாலா தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய ‘சதுரங்க வேட்டை’ படம் சூப்பர் ஹிட்டானது நம்மை சுற்றி நமக்கே தெரியாமல் நம் அறியாமையை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதனை தெளிவாகவும் வியக்கும்படியும் ‘சதுரங்க வேட்டை’ படத்தில் கூறியிருந்தார்கள்.

கடந்த நவம்பரில் ‘சதுரங்க வேட்டை-2’வுக்கான பூஜை போட்டார் மனோபாலா. இந்த படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், பீட்டா விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்த தயாரிப்பாளர் மனோபாலா, தற்போது மறுபடியும் தொடங்கியிருக்கிறார்.

சதுரங்கவேட்டை படத்தில் நட்டி நடராஜ் நடித்த வேடத்தை தொடரும் அரவிந்த்சாமி, கதைப்படி திரிஷா, பரத், டேனியேல் பாலாஜி ஆகியோரை சீட்டிங் செய்வதுதான் இந்த படமாம். அந்த வகையில், தனது தலையில் விக் வைத்து முகத்தை மாற்றி ஆள்மாறாட்டம் செய்யும் அரவிந்த்சாமியை, யாராலும் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத வகையில் காட்சிகள் பண்ணப்பட்டுள்ளதாம்.

ஒரு கட்டத்தில் அவரை திரிஷா அடையாளம் கண்டுகொண்டபோது அவர்களுக்கிடையே எந்தமாதிரி பிரச்சனை வெடிக்கிறது என்பதை விறுவிறுப்பாக படமாக்கியிருக்கிறார்களாம்.

Leave a Response