விக்ரமுக்கு ஜோடியாக ரீது வர்மா..?


தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வரும் விக்ரம், வாலு இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படமொன்றிலும் நடித்து வருகிறார். விரைவில் தொடங்கப்பட உள்ள விஜய் சந்தர் இயக்கும் படத்தின் கதாநாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஆனால், மலையாள நடிகை அனு இமானுவேல் விக்ரமுக்கு ஜோடியாக ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்கிறார் என செய்தி வெளியாகின. இருவரும் இடம்பெற்ற போஸ்டர் கூட வெளியானது.

ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அனு இமானுவேல் தற்போது படத்திலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில், அனு இமானுவேலுக்குப் பதிலாக தெலுங்கு நடிகை ரீது வர்மா ஒப்பந்தப்பம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

‘பெல்லி சூப்புலு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து அப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்தான் நடிகை ரீது வர்மா.’துருவ நட்சத்திரம்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் ரீது வர்மா கலந்து கொள்வார் என்று கௌதம் மேனன் தரப்பில் சொல்லப்படுகிறது.

Leave a Response