“பீட்டாவில் த்ரிஷா உறுப்பினராக இல்லை” ; த்ரிஷா அம்மா விளக்கம்..!


பீட்டா எனும் விலங்குகள் நல அமைப்பின் எதிர்ப்பால், இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், பீட்டாவை மட்டுமின்றி, அதற்கு ஆதரவு தரும் நடிகை த்ரிஷா உள்ளிட்டவர்களுக்கும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், புதுக்கோட்டை அருகில் நடைபெற்ற ‘கர்ஜனை’ படப்பிடிப்பில் இருந்த த்ரிஷாவை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவரது ட்விட்டர் கணக்கையும் சிலர் முடக்கியதாகவும் ஜல்லிக்கட்டு குறித்த தவறான தகவலை பதிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், த்ரிஷாவின் தாய் உமா, நேற்று, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தார். அதில், திரிஷாவின், டுவிட்டர் பக்கத்தை முடக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; திரிஷாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் உமா கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு, த்ரிஷா எதிரானவர் அல்ல என்றும் பீட்டாவில், த்ரிஷா உறுப்பினராகவோ, விளம்பர துாதராகவோ இல்லை என்றும் கூறியுள்ளாராம்..

Leave a Response