விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கியிருக்கும் ‘பைரவா’ படம் பொங்கல் விடுமுறையில் வசூலில் முன்னணியில் இருக்கிறது. கலவையான விமர்சனங்கள் படத்துக்கு இருந்தாலும் போட்டிக்கு படங்கள் இல்லாத காரணத்தால் வசூலில் பின்னிப்பெடலெடுத்து படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் கேரளா முதல் நாளில் சுமார் 20 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. வெளிநாட்டு வசூல் 9 கோடி என்கிறார்கள்.
வரிசையாக ஆறு நாள்கள் விடுமுறை வரவே இந்த வாரத்தில் பைரவா 100 கோடி கிளப்பில் இணைந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வெளியான நான்காவது நாளே பைரவா 100 கோடியை வசூலித்து விட்டதாக படத்தைத் தயாரித்த விஜயா புரடக்ஷனே அறிவித்திருப்பது படத்தைக் குறைத்து மதிப்பிட்ட பலரது வாயை அடைத்திருக்கிறது. ஆக, நான்காவது நாளே 100 கோடி கிளப்பில் இணைந்து விட்டது ‘பைரவா..!’


