
தமிழ் சினிமாவின் பிரபல இளம் முன்னணி நடிகர்களே ஜளிக்கட்டு விவகாரம குறித்து எதுவும் கருத்து சொல்லாமல் மவுனம் காக்கும் நிலையில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதற்கு வலு சேர்க்கும் விதமாக சமீபத்தில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற ஜல்லிக்கட்டு பாடலையும் வெளியிட்டு இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் வெறுமனே குரல் மட்டும் கொடுத்துக்கொண்டு இருக்காமல் தானும் களத்தில் இறங்க முடிவுசெய்துள்ள ஜி.வி.பிரகாஷ், நாளை (17.01.17) சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் களம் இறங்க இருப்பதாக கூறியுள்ளார்..


