தமிழகத்தில் தற்போது மிகப்பெரிய போராட்டமாக மாறியுள்ள ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை விதவிதமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.. இந்தநிலையில் ஜல்லிக்கட்டு குறித்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது ,” ஜல்லிக்கட்டு குறித்த எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் நாவலை படமாக்குவதற்கான உரிமையை வாங்கிவைத்துள்ளேன். விரைவில் அதனை படமாக்க திட்டமிட்டுள்ளேன்” என கூறியுள்ளார்.
மேலும், மிருகவதை என்றுகூறி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், அரசியல் பிண்ணனி இல்லாமல் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடிவருவது பாராட்டத்தக்கது என்றும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை விதிமுறைகளுடன் நடத்த அனுமதிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.,
த்ரிஷா மீதான விமர்சன்ம் குறித்து அவரிடம் கேட்டபோது ,” அனைவருக்கும் கருத்துகளை வெளிப்படுத்து உரிமை உள்ளது. அவ்வாறு யாரும் மாற்று கருத்தினை தெரிவிக்கும் போது கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். தனிப்பட்ட தாக்குதல் முறையானது அல்ல.” என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.