தனுஷ் யார் மகன்..? ; விசு அளித்த விளக்கம்..!


தனுஷை தங்கள் மகன் என மதுரை பக்கத்து தம்பதியினர் ஒருவர் உரிமை கொண்டாடி வழக்கு தொடர்ந்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா 1991லேயே படங்களை இயக்க ஆரம்பித்துவிட்டார். பிரபலமாகவும் ஆரம்பித்துவிட்டார்.

ஆக அவருடன் நன்கு பழகியவர்களுக்கு அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்களா, அல்லது ஒரு மகன் மட்டுமே இருந்தாரா என்பது அப்போதைய காலகட்டத்திலேயே நன்கு தெரிந்திருக்குமே.. அந்த தகவலை யாராவது வெளிப்படுத்தலாமே என்கிற ஆதங்கம் தனுஷ் ரசிகர்கள் தரப்பில் எழுந்தது.

இந்தநிலையில் நடிகரும் இயக்குனருமான விசு தாமாகவே முன்வந்து தனுஷ் பற்றிய ஒரு உண்மையை வெளியிட்டுள்ளார்.. அதில், “என்னிடம் உதவியாளராக பணியாற்றியவர் கிருஷ்ணமூர்த்தி. அவர்தான் பின்னாளில் தன்னுடைய பெயரை கஸ்தூரி ராஜா என்று மாற்றிக் கொண்டார். அப்போது இருந்தே நான் தனுஷை பார்த்துள்ளேன். தனுஷின் சிறிய வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்னிடம் உள்ளது” என்று கூறி அந்தப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Leave a Response