
கடந்த மாதம் சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான் படம் ரெமோ.. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவான இந்தப்படத்திற்கு ஒரு சாராரிடமிருந்து எதிர்மறை கருத்துக்கள் வெளிப்பட்டாலும் இளைஞர்கள் குழந்தைகள் அனைவரையும் இந்தப்படம் கவர்ந்தது..
அதனாலேயே இந்தப்படம் சுமார் எண்பது கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது.. இந்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் கடந்த வாரம் ‘ரெமோ’ வெளியானது.. பிரபல தயாரிப்பளாரும் விநியோகச்தருமான தில் ராஜூ என்பவர்தான் இந்தப்படத்தை வெளியிட்டுள்ளார்..
தெலுங்கு ரசிகர்கள் முதல் மூன்று நாட்களில் இந்தப்படத்திற்கு கொடுத்த ஆதரவையும் வசூலையும் பார்த்து மலைத்துப்போன தில் ராஜூ ‘ரெமோ’ தெலுங்கிலும் நல்ல வெறியை பெற்றுள்ளது என்றும், சிவகார்த்திகேயனை தெலுங்கிற்கும் அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் உற்சாகத்துடன் கூறியுள்ளார்.


