தனுஷுடன் ஜோடி சேர்ந்த இன்னொரு ‘பிரேமம்’ நாயகி..!


ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் தனுஷ். வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்படத்தின் கதைக்களம் ஸ்டண்ட்மேன் ஒருவரைப் பற்றிய கதையாகும். இக்கதையில் ராஜ்கிரணின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். தனது கதாபாத்திரம் சுமார் 30 நிமிடங்கள் வருவது போன்று திரைக்கதை அமைத்திருக்கிறார்.

அதில் தனுஷ் ஜோடியாக நடிக்க மடோனா செபஸ்டின் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தனுஷ் – மடோனா செபஸ்டின் காட்சிகள் விரைவில் காட்சிப்படுத்த இருக்கிறார்கள். அந்தவகையில் ‘கொடி’ படத்தில் ‘பிரேமம்’ நாயகி அனுபமாவுடனும் இந்தப்படத்தில் மடோனாவுடனும் நடித்துவிட்டால், அடுத்து தனுஷுடன் நடிக்கவேண்டியது சாய் பல்லவி மட்டுமே.

Leave a Response