மூன்று கெட்டப்புகளில் நடிக்கும் ஜான் விஜய்..!


இத்தனை நாட்கள் தமிழில் பல படங்களில் பலவிதமான கேரக்டர்களில் நடித்திருந்தாலும், ‘கபாலி’ படத்தில் ரஜினியின் விசுவாசியாக படம் முழுதும் பயணம் செய்யும் கேரக்டரில் நடித்து ரஜினியின் மனதிலும் ரசிகர்களின் மனதிலும் நல்ல இடத்தை பிடித்துள்ளார் நடிகர் ஜான் விஜய். பிரகாஷ் ராஜ், நாசருக்கு அடுத்து எல்லாவித கேரக்டர்களிலும் நடிக்கும் நடிகர் என்றால் கூப்பிடு ஜான் விஜய்யை என்கிற அளவுக்கு அவரது மதிப்பு உயர்ந்துவிட்டது..

ஜான் விஜய்யை ‘ஓரம்போ’ படம் மூலம் தமிழில் அறிமுகப்படுத்திய இரட்டை இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி, அடுத்ததாக விக்ரம்-வேதா என்கிற படத்தை இயக்குகிறார்கள்.. இதில் மாதவனும் விஜய் சேதுபதியும் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது.. இந்தப்படத்தில் ஜான் விஜய்க்கு முக்கிய வேடம் கொடுத்துள்ளார்கள் இந்த இரட்டை இயக்குனர்கள்.. படத்தில் அவருக்கு மட்டும் மூன்று கெட்டப்புகள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Leave a Response