“அவர் அப்படி பண்ணினார் என்றால் நானும் அதேமாதிரி பண்ணனுமா என்ன..?” ; சிம்பு..!


சிம்புவின் படங்கள் ஓடுகிறதோ இலையோ, எப்போதுமே மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.. இப்போதும் கூட இருக்கிறார் தான்.. அதேபோல அவரது படத்திற்கு என்று இப்போதும் ஒரு பிசினசும் இருக்கவே செய்கிறது.. ஆனால் எந்தப்படதையுமே முழுதாக முடித்துக்கொடுக்காமல் இழுக்கிறார் என்கிற குற்றச்சாட்டு சிம்பு மீது உண்டு..

அப்படித்தான் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் படப்பிடிப்பு இன்னும் கூட முடிவடையவில்லை. கௌதம் மேனன் கூட ஒரு பொதுமேடையில் சிம்புவை பற்றி குறை கூறினார்.. ஆனால் தற்போது ஒரு பேட்டியில் கௌதம் மேனன் பற்றி சிம்பு உயர்வாகவே கூறியுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது.

“கௌதம் சார் ஒரு பிரச்சினையில் இருக்கும்போதுதான் இந்தப் படத்தையே தொடங்கினோம். வழக்கமாக, பட வேலைகளில் இருக்கும்போது, தயாரிப் பாளர்களுக்கு வரக்கூடிய பிரச்சினை தான் அவருக்கும் வந்தது. என் தரப்பில் இருந்து எந்த அளவு உதவிசெய்ய முடியுமோ, செய்திருக்கிறேன். அவர் அளித்த பேட்டியில் என்னைப் பற்றி தவறாகப் பேசிவிட்டார் என்பதற்காக நானும் அவரைப் பற்றி பேசவேண்டும் என்ற அவசியம் இல்லை. இதெல்லாம் அனைத்து படங்களின் இறுதியிலும் நடக்கக்கூடிய விஷயங்கள்தான். தற்போது எல்லா பிரச்சினையும் சுமுகமாக முடிந்து, விரைவில் படமும் வெளியாக இருக்கிறது” என கூறியுள்ளார் சிம்பு.

Leave a Response