ஒளிரும் ஈரோடு அமைப்பின் தொடரும் நற்பணி

ஈரோட்டில் தொழிலதிபர்கள் பலர் ஒன்றிணைந்து ‘ஒளிரும் ஈரோடு’ என்கிற அமைப்பை துவங்கியுள்ளனர். கலாச்சாரம், நன்னெறி, கல்வி, உடல்நலம் ஆரோக்கியம், நீர் நிர்வாகம், சுகாதாரம், உள்கட்டமைப்பு உள் ளிட்ட பணிகளை அரசின் உதவியோடு செய்யப்போவதாக அறிவிக்கப்பட்ட இந்த அமைப்பின் துவக்கவிழா கடந்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்றது.அந்த அமைப்பை நடிகர் சூர்யா தொடங்கிவைத்தார்.

பல்வேறு நற்பணிகளைச் செய்துவரும் ஒளிரும் ஈரோடு அமைப்பு, ஈரோடு மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள குளம், குட்டை, தடுப்பணை போன்ற நீர் நிலைகளைத் தூர்வாரி ஆழப்படுத்தி சுத்தம் செய்து வருகிறது.

இந்நிலையில், ஒளிரும் ஈரோடு அமைப்பின் சார்பில் கதிரம்பட்டியில் உள்ள 4 தடுப்பணைகளைத் தூர்வாரும் பணி அக்டோபர் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பின் தலைவர் எம்.சின்னசாமி, துணைத் தலைவர்கள் டி.வெங்கடேஸ்வரன் பி.ராமலிங்கம், கதிரம்பட்டியின் ஊராட்சித் தலைவர் மகாலிங்கம், ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் நல்லசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுமக்களின் ஆதரவுடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்தத் தூர்வாரும் திட்டத்தின் மூலமாக தடுப்பணைகளின் அகலம் மற்றும் ஆழம் உயர்ந்து நீர்பிடிப்பு பகுதியின் அளவு அதிகரிப்பதோடு, இதற்கு ஒளிரும் ஈரோடு அமைப்பின் சார்பில் ரூ. 35 லட்சம் செலவிடத் திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.

மழைக்காலம் தொடங்குமுன்பு தொடங்கப்பட்ட இப்பணியினால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

Leave a Response