திரைப்பட இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் முன்னின்று நடத்திய அனிதா உரிமைஏந்தல் நிகழ்வில் அமீர் பேசிக்கொண்டிருக்கும்போது பா.ரஞ்சித் குறுக்கிட்டுப் பேசியது பலத்த விவாதங்களை எழுப்பியுள்ளது.எதிரிக்கு எதிராக ஒன்றாக நின்று சண்டை போடவேண்டியவர்கள் தங்களுக்குல் சண்டை போட்டுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.
இந்நிலையில் இந்நிகழ்வு பற்றி நடிகர் எஸ்.வி.சேகர்,
“”தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித்.”” தன் ஜாதியை பெருமையாக சொல்லும் ரஞ்சித்திற்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் என்று டிவீட் போட்டிருந்தார்.
அவருக்குப் பதிலளித்து அவருடைய பதிவின் பின்னாலேயே, தலித் என்பது சாதியல்ல, ஆரியம்- சாதியம் ஒழிக்கும் விடுதலைக் கருத்தியல் என்று டிவீட் போட்டார் இயக்குநர் பா.ரஞ்சித்.
அதற்குப் பதிலளித்து,
“தம்பி தலித் என்று சொன்னது நீங்கள் தான். ஆரியம்-சாதியம் ஒழிக்கும் விடுதலை கருத்தியல்.”நடைமுறை சாத்தியமில்லா கருத்தியல். காலம் உணர்த்தும்.1/2
வெற்றி வேகம் தங்களின் பதில். வயதும் அனுபவமும் கூடக்கூட தெளிவு பெறுவீர்கள்.என் நண்பர் தங்களின் நாயகன் புரிய வைப்பார் My Blessings.
என்று இரண்டு டிவீட்டுகள் போட்டிருக்கிறார் எஸ்.வி.சேகர்.
இந்தக்கருத்துகளுக்குப் பின்னால் எஸ்.வி.சேகரின் கருத்தை விமர்சனம் செய்து நிறையப்பேர் பேசியிருக்கிறார்கள்.