
சூப்பர்ஸ்டார் ரஜினி ஜுரம் யாரைத்தான் விட்டுவைத்திருக்கிறது.. பிரபலங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.. கிரிக்கெட்டின் நம்பர் ஒன் வீரர் எம்.எஸ்.தோனியும் அதை நேற்று நிரூபித்துள்ளார். நீரஜ் பாண்டே இயக்கத்தில் சுஷந்த் சிங் ராஜ்புட் நடித்த, மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம். ‘எம்.எஸ்.தோனி’ செப்டம்பர் 30ல் தமிழ், இந்தியில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. ப்ரமோ நிகழ்ச்சிக்கு தோனி வந்திருந்தார்.. அந்த நிகழ்வில் பேசும்போது, சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேமஸ் டயலாக்கான ‘என் வழி தனி வழி’ என்கிற வசனத்தை பேசி கைதட்டலை அள்ளினார். அதுமட்டுமல்ல, ரஜினியை நேரில் சந்திக்கவேண்டும் என ஆவலுடன் காத்திருந்த ரஜினி, நேற்று மாலை ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து தனது நீண்டநாள் கனவை நிறைவேற்றிக்கொண்டார்.


