
நான்கு விடலைப்பையன்களை வைத்து இயக்கிய ‘ரேணிகுண்டா’ என்கிற த்ரில்லர் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹிட் பட இயக்குநராக அறிமுகமானவர் பன்னீர்செல்வம். அதனைத் தொடர்ந்து நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் மகன் ஜானியை ஹீரோவாக வைத்து ’18 வயசு’ என்கிற படத்தையும் இயக்கினார். அனால் அந்தப்படம் சரியாக போகாததால் அடுத்த படம் கிடைப்பதில் ஒரு இடைவெளி விழுந்தது..
அந்த படங்களைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் பன்னீர்செல்வம். தற்போது அக்கதையில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகிவிட்டது என்றாலும், அவர் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லையாம் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவக்கத்தில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.


