பாரதிராஜாவின் மகன் இயக்கும் ‘ஒரு கொம்பு கதை’..!


இயக்குனர்களின் வாரிசுகள் நடிகராவதும் இயக்குனராவதும் ஒன்றும் புதிதல்ல என்றாலும் நடிகராக களம் இறங்கிய பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதி டைரக்சன் துறையில் களமிறங்க இவ்வளவு தாமதம் ஆனது ஆச்சர்யம் தான்.. அதிலும் பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’, ஷங்கரின் ‘எந்திரன்’, மணிரத்னத்தின் ‘பாம்பே’ உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார்.

சரி எதற்கும் கால நேரம் கைகூடிவர வேண்டாமா..? அந்தவகையில் ‘ஒரு கொம்பு கதை’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் மனோஜ்.. இப்படத்தில் மஹத் நாயகனாக நடிக்கவிருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மனோஜ் கே.பாரதி தனது தந்தையின் எவர்கிரீன் சைக்கோ த்ரில்லரான ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அந்தப்படம் இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Response