“சினிமாக்காரர்கள் ஒன்று சேர்ந்து வங்கி ஆரம்பிக்கவேண்டும்” ; எஸ்.பி.ஜனநாதன் வேண்டுகோள்..!


அருண்விஜய் நடித்துள்ள க்ரைம் திரில்லர் படம் ‘குற்றம் 23’ ‘ஈரம்’ புகழ் அறிவழகன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். . படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் கௌதம் மென, எஸ்.பி.ஜனநாதன், சசி, மகிழ்திருமேனி ஆகிய இயக்குனர்களும் ஜெயம் ரவி, பரத், ஸ்ரீகாந்த் ஆகிய நடிகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்..

இந்த விழாவில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பேசிய விஷயம் கவனிக்கத்தகதாக இருந்தது.. அதாவது சினிமாவை கோடி கோடியாக கொட்டி தயாரிக்கும் நாம், அதை படமாக்கி விற்று லாபம் பார்ப்பதை மட்டும் எங்கிருந்தோ வந்த தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து விடுகிறோம்.. சினிமாக்காரர்களுக்கு என ஒரு வங்கி தனியாக ஆரம்பிக்க வேண்டும்.. 500 கோடி இருந்தால் ஆரம்பிக்கலாம் என சொல்கிறார்கள்.. நிச்சயமாக நம்மால் முடியும்.. அப்படி செய்தால் தான் சினிமாவை அழியாமல் காப்பாற்றி, நம் லாபத்தை நாமே அனுபவிக்க வழிவகை பிறகும்” என்றார் ஜனநாதன். யாராவது ஆவன செய்ய முயற்சி எடுப்பார்களா..?

Leave a Response