திருநங்கையின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய ‘தர்மதுரை’


தர்மதுரை திரைப்படம் பார்த்த அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம் அந்தப்படத்தில் நடித்த்ருந்த திருநங்கை ஒருவரை மிக கண்ணியமான வாட்ச்வுமன் கதாபாத்திரமாக சித்தரித்திருந்ததும், கதாநாயகன் விஜய்சேதுபதி அவரது வாழ்க்கை பாதையை சீரமைத்து தருவதும் தான்.. வாட்ச்வுமனாக நடித்து எல்லோரிடமும் பாராட்டைப்பெற்ற அந்த திருநங்கையின் பெயர் ஜீவா என்கிற ஸ்நேகா..

இவரது சொந்த ஊர் சிவகாசி, இவருக்கு தான் திருநங்கை என்று தெரிந்ததும் 13 ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்துவிட்டார். சினிமா ஆசையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ஒப்பனை கலைஞராக பிரபல நடிகைகள் அனுஷ்கா, ஸ்ரேயா, விசாலினி ஆகியோரிடம் பணிபுரிந்தார்.அப்பொழுது தர்மதுரை படத்திற்கு விசாலினி அவர்களுக்கு ஒப்பனைகலைஞராக பணியாற்ற சென்றிருந்தபோது. இயக்குனர் திரு.சீனுராமசாமி அவரை அழைத்து நடிக்க வைத்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “என் அண்ணணாகவே மாறி திரு.விஜய்சேதுபதி அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார். இந்த தீபாவளி வந்தால் என் பெற்றோர்களை பிரிந்து 10 வருடங்கள் ஆகிறது. ஊரில் படம் பார்த்துவிட்டு என் பெற்றோர், அண்ணன் ஆகியோர் என்னை அழைத்து பேசினர்.. இந்த படத்தில் நடித்ததின் மூலம் பிரிந்து இருந்த என் குடும்பத்தினருடன் நான் சேர்ந்துவிட்டேன். என்னை திரையுலகில் அறிமுகப்படுத்தி இப்படியொரு கௌரவமான பாத்திரத்தில் நடிக்க வைத்த அண்ணன் இயக்குனர் திரு.சீனுராமசாமி அவர்களுக்கு நன்றி” என்கிறார் நெகிழ்ச்சியாக.

Leave a Response