
தமிழ் நடிகைகளுக்கு சரியான வாய்ப்பு அமைவதில்லை என விஜய்சேதுபதி அமர்ந்திருந்த ஒரு மேடையிலே சில மாதங்களுக்கு முன் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார் ‘கங்காரு’, ‘வந்தா மல’ படங்களில் நடித்த நாயகி ஸ்ரீஜா. இன்றையதினம், திருமண வீட்டாரின் விருப்பப்படி அனைத்தையும் அவர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘மை கிராண்ட் வெட்டிங்’ என்கிற செயலியை (App) அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் ஸ்ரீஜா..
அவரிடம் அன்று மேடையில் குமுறலை வெளிப்படுத்தினீர்ர்களே.. அதன்பிறகு வாய்ப்புகள் ஏதும் தேடி வந்துள்ளதா என கேட்டதற்கு, அந்த நிகழ்விற்கு பிறகு விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள்.., உரிய வாய்ப்புகள் வரும்போது அழைப்பதாகவும் ஊக்கப்படுத்தியுள்ளனர். நீங்கள் இவ்வளவு தூரம் ஞாபகம் வைத்து கேட்கிறீர்கள் அல்லவா.? அதனாலேயே நான் ஒரு நல்ல இடத்திற்கு நிச்சயம் வருவேன் என நம்புகிறேன்..” என்றார் ஸ்ரீஜா.


