அஜித்தின் சென்டிமென்ட் நடிகராக மாறிய தம்பி ராமையா..!

 

குணச்சித்திர நடிகராக வலம்வரும் நடிகர் தம்பி ராமையாவை தங்களது படங்களில் தொடர்ந்து சென்டிமென்ட்டாக நடிக்க வைக்க பல இயக்குனர்களும் நடிகர்களும் விரும்புகிறார்கள்.. அந்தவகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம் ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் தம்பிராமையா..

இந்த தொடர் பயணத்தால் இயக்குனர் சிவாவுக்கும் அஜித்துக்கும் தம்பி ராமையாவையும் அவரது நடிப்பையும் ரொம்பவே பிடித்துவிட்டது. அதனால் தான் தற்போது அஜித்தை வைத்து சிவா இயக்கவுள்ள புதிய படத்தில் மூன்றாவது முறையாகவும் இணைந்திருக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். இது, சர்வதேச குற்றம் தொடர்பான திகில் படம் என்பதால் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகவிருக்கிறதாம். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

Leave a Response