
சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி இருக்கும் படம் தான் ‘தர்மதுரை’. இந்தப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார். இந்தப்படத்தின் டைட்டில் முதற்கொண்டு மற்ற விஷயங்கள் அனைத்துமே படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது..
விஜய்சேதுபதியின் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுவருவதால், அந்த நம்பிக்கையிலும், படத்தின் கதை மீதுள்ள நம்பிக்கையிலும் இந்தப்படத்தை தானே சொந்தமாக வெளியிட முடிவு செய்துள்ளாராம் ஆர்.கே.சுரேஷ்.
இந்தப்படத்திற்கு கிடைக்கும் வெற்றியைப் பொறுத்துதான் ஏற்கனவே சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகி நீண்ட நாட்களாக பெட்டிக்குள் கிடக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்திற்கும் ஒரு விடிவு காலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


