விடுதலைச் சிறுத்தைகளின் 8 வேட்பாளர்கள் அறிவிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை தொல் திருமாவளவன் நேற்று அறிவித்தார்.

1.காட்டுமன்னார்கோவில் – தொல்.திருமாவளவன்,
2.செய்யூர்-சிந்தனைச்செல்வன்
3.திண்டிவனம்-வன்னியரசு
4.அரக்கோணம்-எழில் கரோலின்
5.திருப்போரூர்-பன்னீர்தாஸ்
6.பண்ருட்டி-அப்துல் ரகுமான்
7.கள்ளக்குறிச்சி-வழக்குரைஞர் மாலதி
8.பெரியகுளம்- ஆற்றலரசு

தற்போது, சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் எஸ்.எஸ்.பாலாஜி,பனையூர் பாபு, ஆளூர் ஷா நவாஸ் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தற்போது சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கும் தொல்.திருமாவளவன், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது மக்கள் நலக் கூட்டணியில் இணைந்திருந்த திருமாவளவன், இந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதன்பின்,2019,2024 ஆம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இப்போது சட்டமன்றத் தேர்தலில் வென்றால்,இரண்டில் ஒன்றிலிருந்து விலகியாக வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Response