அமித்ஷா செங்கோட்டையன் சந்திப்பு – எடப்பாடி கேட்கும் கேள்வி

அதிமுக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை இணைக்​கும் முயற்​சியை 10 நாட்​களில் தொடங்க வேண்​டும் என, அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் எடப்பாடி பழனிச்​சாமிக்​கு, முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் செப்டம்பர் 5 அன்று கெடு விதித்​தார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த அமைப்​புச் செய​லா​ளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் ஆகிய பதவி​களைப் பறித்து எடப்பாடி பழனிச்​சாமி நடவடிக்கை எடுத்​தார். மேலும், அவருடன் கோபி, நம்​பியூரைச் சேர்ந்த பல நிர்​வாகி​களின் பதவி​களும் பறிக்கப்​பட்​டன.

இதைத் தொடர்ந்து முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையனை ஈரோடு மாவட்​டம் கோபி​யில் உள்ள அவரது
இல்​லத்​தில் அதிமுகவினர் தொடர்ந்து சந்​தித்து ஆதரவு தெரி​வித்​தனர். இந்​நிலை​யில், கே.ஏ.செங்​கோட்​டையன் கோபி​யில் இருந்து புறப்பட்டு நேற்று காலை கோவை சென்றார். பின்​னர் கோவை, பீளமேட்டில் உள்ள சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் இருந்து புதுடெல்லி புறப்​பட்​டுச் சென்​றார்.

முன்​ன​தாக அவர் கோவை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது….

நான் ஹரித்​வாரில் உள்ள கோயிலுக்​குச் செல்​கிறேன். பாஜக தலை​வர்​கள் யாரை​யும் சந்​திக்க புதுடெல்லி செல்​லவில்​லை. 9 ஆம் தேதி செய்​தி​யாளர் சந்​திப்பு எது​வும் இல்​லை. ‘கலங்க வேண்​டாம்; நியாய​மான கோரிக்​கையைத் தான் வைத்​துள்​ளீர்​கள்’ என தொண்​டர்​கள் என்​னிடம் சொல்​கிறார்​கள்.
எனவே, கோயிலுக்​குச் சென்​று​விட்டு வந்​தால் மனம் கொஞ்​சம் ரிலாக்ஸ் ஆக இருக்​கும். அமமுக
பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் கருத்​துக்கு நான் பதில் கூற முடி​யாது. கட்​சி​யின் நன்​மைக்​காக என் கருத்தைச் சொன்​னேன்.

பல்​வேறு முடிவு​களை கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் எடுத்​துள்​ளார். அவர் முடிவுக்கு கருத்துச் சொல்ல இயலாது. காலம்​தான் பதில் சொல்​லும். பாஜக தலை​வர்​களைச் சந்​திக்க நான் ஹரித்​வார் செல்​ல​வில்​லை. இராமரை
சந்​திக்​கச் செல்​கிறேன். வேறு யாரை​யும் சந்​திக்​க​வில்​லை. நாளை பிற்​பகல் திரும்​பு​கிறேன். 2 நாட்​களில் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் என்னைச் சந்​தித்​துள்​ளனர்.

இவ்​வாறு அவர் கூறி​னார்.

அப்​போது, ‘உங்​களை அதி​முக நிர்​வாகி​கள் யாராவது சந்​தித்​தார்​களா?’ என செய்​தி​யாளர்​கள் கேட்​டதற்​கு, முதலில் ‘நோ கமென்ட்​ஸ்’ என்​றவர், மீண்​டும் அதே கேள்​வியைச் செய்​தி​யாளர்​கள் எழுப்​பிய​தால் ‘சஸ்​பென்​ஸ்’ என்​றார். மேலும்,எடப்பாடி பழனிச்​சாமி தரப்​பில் இருந்து யாராவது பேசி​னார்​களா? என செய்​தி​யாளர்​கள் கேட்​டதற்​கும், ‘நோ கமென்ட்​ஸ்’ எனக் கூறி​விட்டு செங்​கோட்​டையன் புறப்​பட்​டுச் சென்​றார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் செங்கோட்டையன் நேற்று இரவு சந்தித்தார். அப்போது, அதிமுகவில் இருந்துதான் நீக்கப்பட்டது குறித்தும் தற்போதைய சூழல் குறித்தும் அவரிடம் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் அறிந்து எடப்பாடி தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.கே.ஏ.செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகளைப் பறிக்கிறோம் என்கிற தகவலை பாஜக மேலிடத்துக்குச் சொல்லிவிட்டு அவர்கள் சம்மதத்துடன் தான் செய்தோம்.எங்களிடம் அவரை நீக்கச் சம்மதம் சொல்லிவிட்டு பின்னர் அவரையும் வரச் சொல்லி சந்திக்கிறார் அமித்ஷா/இது சரியா? என எடப்பாடி தரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Leave a Response