காங்கிரசை நம்பமுடியாது என்பதால் அதிமுகவினரை இழுக்கிறார் விஜய்

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்கள் சமஉ பதவியிலிருந்து விலகிவிட்ட தவெகவில் சேர்ந்தனர். முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றனர். தொடர்ந்து சுமார் 5 நிமிடம் அவர்களிடம் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்று, வெறும் 21 நாட்களில் பதவி விலகியுள்ள மூவரும் மற்றொரு கட்சியில் உடனே இணைந்துள்ளது எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி தரப்பு, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல ஓரிரு நாளில் அடுத்தடுத்து 7 சமஉக்கள் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரத்தில்,முதல்வர் விஜய் அதிமுக சமஉக்களை இழுக்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளது ஏன் என்பது தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று வந்தவர்கள்.அவர்கள் இறுதிவரை கூட்டணியில் தொடர்வார்களா என்பது கேள்விக்குறிதான்.
எந்த நேரத்திலும் அவர்கள் காலை வாரிவிட வாய்ப்புள்ளது.10 ஆண்டுகள் காங்கிரசு ஆட்சி அமைவதற்கும், இராகுல்காந்தியை காங்கிரசே பிரதமர் வேட்பாளராக அறிவிக்காத நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான், அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்.அப்படியிருந்தும்,திமுகவிடம் சொல்லாமல், அந்தர்பல்டி அடித்து நம்முடன் சேர்ந்திருப்பவர்கள்,நாளை நம்மையும் அப்படியே அம்போவென விட்டுச் செல்லமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? என்று தனது நெருங்கிய சகாக்களிடம் விஜய் கூறியுள்ளார்.

இப்படிப்பட்டவர்களை நம்பியிருந்தால் ஆட்சியை இழக்கத்தான் செய்யவேண்டும்.எனவே,அவர்களின் ஆதரவை தாண்டி மேலும் சமஉக்கள் பலம் வேண்டும்.அதற்கு அதிமுக சமஉக்களை தங்கள் பக்கம் இழுப்பதுதான் ஒரேவழி என்ற முடிவுக்கு விஜய் வந்துள்ளார்.

இதனால் சமஉக்களை இழுக்க குதிரை பேரம்,தவெகவிற்கு வந்தால் மீண்டும் அதேதொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று ஆசைவார்த்தை காட்டப்பட்டது.20 சி வரை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வெற்றி பெற்றவுடன் வாரியத்தலைவர் பதவியும் வழங்கப்படும் என்ற ஆசைவார்த்தையில்தான் அதிமுக சமஉக்கள் 3 பேரும் தவெகவிற்கு சென்றுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

அவர்களுக்கு அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.அவர்கள் அந்தந்தத் தொகுதிகளில் தவெகவின் விசில் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்வுகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.விஜய் செய்வது மிக மிக கேவலமான அரசியல் என்று விமர்சனம் செய்துவருகிறார்கள்.

Leave a Response