தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றவிட்டு நயினார் நாகேந்திரனை தலைவராக அறிவித்துவிட்டனர். அதன்பின், தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி சேருவகதாக அறிவித்திருக்கிறது பாஜக.
இந்த அறிவிப்புக்குப் பிறகு அதிமுக மற்றும் பாஜக தலைமையில் இருப்பவர்கள் ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள்.அதிமுக தொண்டர்களுக்கு இக்கூட்டணியில் துளியும் விருப்பமில்லை என்று சொல்லப்படுகிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு கட்சித் தொண்டர்களும் ஒருவரையொருவர் விம்ர்சித்துப் பேசும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பாஜகவில் இருந்துகொண்டு அதிமுகவை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன்,இந்த ரஎச்சரிக்கையை விடுத்ததோடு, பாஜகவில் இனி வார் ரூம் அரசியல் இருக்கக் கூடாது எனக் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நயினார் நாகேந்திரனின் இந்தக் கருத்து பாஜகவில் இருக்கும் உட்கட்சிப் பூசலை வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்க்ர்கள் கூறுகின்றனர்.
எப்படி என்றால்?
பாஜக்வில் வார் ர்ரும் என்று சொல்லப்படும் சமூகவலதளப் பதிவாளர்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டு,தன்னைப் பற்றி உயர்வாகவும், தன்க்குப் பிடிக்காதவர்கள் பற்றி அவதூறுகளையும் அள்ளிவீசிக் கொண்டிருந்தார் அண்ணாமலை.
அவர்கள் தற்போது அண்ணாமலைக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் தலைமையிலும் பாஜக நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாமல் கூட்டணிக் கட்சியான அதிமுக குறித்து கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார்களாம்.
இவையெல்லாம் அண்ணாமலையின் ஆசியோடுதான் நடைபெறுகிறது என்பதை அறிந்து அதிர்ந்து போனாராம் நயினார் நாகேந்திரன்.இதனால் தான் வெளிப்படையாக இப்படி ஓர் எச்சரிக்கையை விடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் நயினார் நாகேந்திரனின் நான்கு கோடி ரூபாய் பணம் பிடிபட்டது.அதற்குக் காரணம் அண்ணாமலைதான் என்று அப்போதே பேசப்பட்டது.
அப்போதிருந்தே இருவருக்குமிடையே மறைமுக மோதல் இருந்து வந்தது என்றும் இப்போது அது வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.